புத்தகம் : காலநிலை மாற்றம்
ஆசிரியர் : நாகமுத்து பிரதீபராஜா
பதிப்பகம் : சேமமடு பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : புவியியல்
ISBN: 978-955-685-173-1
விலை : 1800 பக்கங்கள் : 254
புத்தகம் : நறுந்தொகை
ஆசிரியர் : ந.மு.வேங்கடசாமி நாட்டார்
பதிப்பகம் : பத்மம் பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : குழந்தை இலக்கியம்
ISBN: 978-955-0367-50-4
விலை : 180.00 பக்கங்கள் :
வெளியீடு எண் : இதழ்-71-73
ஆசிரியர் : தெ.மதுசூதனன்
ISSN : 20219041
விலை : 100.00 ரூபா
வெளியீடு : 2017 May - July
பதிப்பாசிரியர் : சதபூ.பத்மசீலன்

பௌதிகப் புவியியல்:புவியின் அமைப்பும் அகச்செயன்முறையும்

புவியானது இன்று வானவெளியிலிருந்து அவதானிக்கப்படுவது மட்டுமன்றி அதன் சமுத்திரத் தரைகள், தரையுயர்ச்சி மற்றும் அமைப்புக்கள் என்பவற்றையும் மிகத்தெளிவாக அவதானிக்கும் அளவிற்கு விஞ்ஞான ரீதியாக வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. புவியின் தோற்றம் அதன் வரலாறு தொடர்பாக ஆய்வு செய்வதற்கான எமது திறன்கள் விருத்தியடைந்துள்ளதுடன் புவியின் வடிவமைப்புக்குக் காரணமான சக்திகளும் கண்டறியப்பட்டுள்ளன. ஓர் இயக்கவியல் தொகுதியாக பூமி எவ்வாறு தொழிற்படுகின்றது என்பதையும் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். எரிமலைகள், புவிநடுக்கங்கள், மலையாக்கம், கண்ட நகர்வு என்பன புவியின் உட்பகுதி வெப்பத்தின் வெளிப்பாடெனத் தெளிவாகக் காட்டப்பட்டுள்ளது. விஞ்ஞான தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக பொருத்தமான கருவிகளும், தொழில்நுட்பமும், சான்றுகளும் புவியினைப் பற்றிய எமது விளங்கிக் கொள்ளலை மேலும் அதிகரித்துள்ளது. பௌதிகப் புவியியலுக்கான ஓர் அறிமுகத்துடன் ஆரம்பமாகும் இந்நூலின் உள்ளடக்கத்தில் புவியின் உட்பாகம், கனிப்பொருட்களும் பாறைகளும், கண்ட நகர்வு, எரிமலைகளின் செயற்பாடுகள்; அவற்றினால் உருவாக்கப்படும் நிலவுருவங்கள், புவிநடுக்கங்கள் மற்றும் வானிலையாலழிதல் போன்ற விடயங்கள் தொடர்பாக விரிவாக எழுதப்பட்டுள்ளது.
புவியியல் பாடத்தினைப் பரீட்சை நோக்கிலன்றி, அதனை ஆழமாகப் பல்வேறு உதாரணங்கள் மற்றும் விளக்கப் படங்களுடன் மாணவர்கள் விளங்கிக் கொள்ளும் நோக்கில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. உயர்தர வகுப்பில் புவியியலை ஒரு பாடமாகக் கற்கும் மாணவர்களுக்குத் தரமான நூல்களின் பற்றாக்குறை முக்கியமானதொரு குறைப


க.ஐயம்பிள்ளை
Aiyampillai, K

வளம் நிறைந்த வன்னிமண் தந்த பெருமகன் கந்தையா ஐயம்பிள்ளை. அரசபணியில் எழுதுநராக ஆரம்பித்து நிர்வாகசேவை வரை உயர்ந்தவர்.  கொழும்பு, திருகோணமலை எனப் பல இடங்களில் பணியாற்றியுள்ளார். 

வவுனியா சிந்தாமணி ஆலய அறங்காவலர் சபை, சுத்தானந்த இந்து இளைஞர் சங்கம், மணிவாசகர் சபை, தமிழ்ச்சங்கம் ஆகியவற்றில் பொறுப்பான பதவிகளில் பொதுப்பணியாற்றிவர்.
 
கல்லூரி மாணவனாக அகில இலங்கை ரீதியிலான சைவசமயப் பாடப் பரீட்சையில் அதிக புள்ளிகள் பெற்றதன்மூலம் தங்கப்பதக்கத்தைத் தனதாக்கிக் கொண்டவர். அருவி, எழுச்சி ஆகிய பத்திரிகைகளின் ஆசிரியராகவும் முத்திரை பதித்தவர்.