புத்தகம் : காலநிலை மாற்றம்
ஆசிரியர் : நாகமுத்து பிரதீபராஜா
பதிப்பகம் : சேமமடு பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : புவியியல்
ISBN: 978-955-685-173-1
விலை : 1800 பக்கங்கள் : 254
புத்தகம் : நறுந்தொகை
ஆசிரியர் : ந.மு.வேங்கடசாமி நாட்டார்
பதிப்பகம் : பத்மம் பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : குழந்தை இலக்கியம்
ISBN: 978-955-0367-50-4
விலை : 180.00 பக்கங்கள் :
வெளியீடு எண் : இதழ்-71-73
ஆசிரியர் : தெ.மதுசூதனன்
ISSN : 20219041
விலை : 100.00 ரூபா
வெளியீடு : 2017 May - July
பதிப்பாசிரியர் : சதபூ.பத்மசீலன்

தமிழரின் தோற்றமும் பரம்பலும்

'உலக முதற்றாய் மொழி தமிழே' என்று வலுவாக நிறுவியவர் மொழிநூல் மூதறிஞர் பாவாணர் அவர்கள் மாந்த நாகரிக வரலாறு தெற்கிலிருந்து தொடங்கியிருக்கின்றது. என்று அவர் கூறுவார். அவர் போற்றிய வரலாற்று அறிஞர்களுள் ஒருவர் வீ. ஆர்.இராமசந்திர தீட்சிதர். தமிழரின் தோற்றம் பரவல், நாகரிகம் பற்றி போலியான ஆதாரங்களைக் காட்டியோ காழ்ப்புணர்வுடனனோ சில வரலாற்றிஞர்கள் வம்படி வழக்காடல்கள் செய்தனா, செய்து வருகின்றனர். 
ஆனால் அன்றைக்கும் இன்றைக்கும் இத்தகைய பொய்யுரைகளைத் தோலுரித்துக் காட்டும் மெய்யான முயற்சிகளும் நடந்துவருகின்றன. அவ்வகையில் அறிஞர் வி. ஆர் இராமச்சந்திரனார் ஆங்கிலத்தில் சொற்பொழிவாற்றி அது ஆங்கிலத்திலேயே The Origin and Spread of the Tamils  என்று நூலாக ஐம்பது ஆண்டுகளுக்கு முன் வெளிவந்தது. அதை நம் காலத்தில் வாழும் வரலாற்று ஆய்வாளர பாவாணர் வழியிலே ஆய்வு நடைப்போடும் அறிஞர் பி. இராமநாதன் அவர்கள் அருமையாக தமிழாக்கம் செய்துள்ளார் அதுவே உங்கள் கையில் தவழ்ந்துக் கொண்டிருக்கும் இச்சிறு நூல். 
அறிஞர் வி.ஆர் இராமசந்திரனார் 'தமிழர் தென்னிந்தியாவின் தொல்குடிகளே அவர்கள் மெசபத்தோமியாப் பகுதியிலிருந்து இங்கு வந்து குடியேறியவர்கள் என்று சில அறிஞர்கள் கூறுவது தவறு  தொல்தமிழரே தென்னிந்தியாவிலிருந்து உலகெங்கும் பரவினர் சிந்துவெளி , எலாம், சுமேரியா, எகிப்து போன்ற பண்டை நாகரிகங்களை எல்லாம் உருவாக்கியவர்கள் இங்கிருந்து அங்கு பரவிய தமிழர்களே!' என்ற உண்மைகளை ஆணித்தரமான சான்றுகளுடன் இச்சிறு நூலில் நிறுவுகிறார். சொற்பொழிவு என்பதால் நூல் நாற்பது பக்கங்களில் சுருக்கியுள்ளார். ஆனாலும்சுற


அருளானந்தம் சிறீகாந்தலட்சுமி
Arulanandam Sri Kanthaluxmy

அருளானந்தம் சிறீகாந்தலட்சுமி கல்விசார் நூலகராக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பணிபுரிகிறார். தொடர்ந்து நூலகவியல் பண்பாட்டைச் சமூக மட்டத்தில் விருத்தி செய்யத் தனது அறிவு, ஆய்வு சார்ந்த புலங்களை குவியப்படுத்திச் செயற்படுபவர். இவர் கல்விசார் நூலகர் என்னும் பதவியை வெறுமனே அலங்கரிக்கவில்லை. கல்வியின் விரிவாக்கம், அறிவுப் பிரவாகம், நூலக தகவல் அறிவியல் போன்றவற்றை தமிழ்ச் சிந்தனையுடன் தமிழர் வாழ்புலத்துடன் இணைக்கும் முயற்சியில் ஆர்வமுடன் ஈடுபட்டு வருபவர். வாசிப்புப் பண்பாட்டின் பன்முகப்பாட்டை வலியுறுத்தும் சமூக செயற்றிட்டங்களை மக்கள் மயப்படுத்துவதில் தீவிரமான ஈடுபாடு கொண்டவர்.