புத்தகம் : காலநிலை மாற்றம்
ஆசிரியர் : நாகமுத்து பிரதீபராஜா
பதிப்பகம் : சேமமடு பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : புவியியல்
ISBN: 978-955-685-173-1
விலை : 1800 பக்கங்கள் : 254
புத்தகம் : நறுந்தொகை
ஆசிரியர் : ந.மு.வேங்கடசாமி நாட்டார்
பதிப்பகம் : பத்மம் பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : குழந்தை இலக்கியம்
ISBN: 978-955-0367-50-4
விலை : 180.00 பக்கங்கள் :
வெளியீடு எண் : இதழ்-71-73
ஆசிரியர் : தெ.மதுசூதனன்
ISSN : 20219041
விலை : 100.00 ரூபா
வெளியீடு : 2017 May - July
பதிப்பாசிரியர் : சதபூ.பத்மசீலன்

அரபு வசந்தம்

'வரலாறு ஒரே நேரத்தில் விடுதலையாகவும், தேவையாகவும் இருக்கின்றது' என்கின்றார் கிராம்சி. தொன்மையான சமூகம் அதன் கூட்டுத் தன்மையிலிருந்து தனித்து அமைப்பாக மாறி, மாபெரும் உழைப்புப் பிரிவினையாக மாறியது. இதன் தொடர்ச்சியே தந்தைவழி சமூகத்தின் உருவாக்கம். வரலாற்றுத் தொடர்ச்சியில் இந்த அமைப்பு முறை பரிணாமமடைந்து ஒவ்வொரு பிராந்தியத்திலும் வித்தியாசமான குணவியல்புகளை அடைந்தது. இது இஸ்லாமிய சமூகத்திலும் அமைப்பிலும் பிரதிபலித்தது. அரபு நாடுகளில் புதிய தந்தைவழி சமூகமாக உருமாற்றம் அடைந்தது. அது ஐரோப்பிய நவீனத்துவத்திலும் தாக்கத்தினை ஏற்படுத்தியது.
அரபு மக்களின் போராட்டத்தினை எடுத்துக் கொண்டால், எகிப்து (1830), அல்ஜீரியா (1870), துனீசியா (1882), மொராக்கோ (19911) போன்ற நாடுகளில் காலத்துக்குக் காலம் தொடர்ச்சியாக ஏற்பட்ட போராட்டங்களி தோல்வி அரபுலகை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தின. 'ஐரோப்பிய மறுமலர்ச்சிக்கால மதிப்பீடுகளை உள்வாங்கல், ஏகாதிபத்தியம் மற்றும் காலணியாதிக்கத்திற்கு எதிரான போராட்டங்கள் போன்றவற்றால் அதன் புரட்சிகரத் தன்மை வெளிப்படத் தொடங்கியது' என்கின்றார் சமீர் அமீன்.
தேசியம் என்கின்ற கருத்துக்கு நேர் எதிரான நிலையில் ஏகாதிபத்தியமும், காலனித்துவமும் இருக்கின்றன. ஏகாதிபத்தியம் உழைக்கும் நாடுகளையும், மற்றைய நாடுகளையும் தன்னை விரிவுபடுத்திக் கொள்வதற்காகவும், பலப்படுத்திக் கொள்வதற்காகவும் கடுமையாக ஒடுக்குகின்றது. அதாவது ஏகாதிபத்தியம் சுயநிர்ணய உரிமையை ஒடுக்குகின்றது. இதன் விளைவாக ஒடுக்கப்பட்ட நாடுகள் தம்மைக் கட்டியெழுப்பிக்கொள்கின்ற தன்மையே அரபுலகின


மா.சின்னத்தம்பி
Sinnaththamby, M

மாரிமுத்து சின்னத்தம்பி யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கல்வியியல் துறையில் முதுநிலை விரிவுரையாளராகப் பணியாற்றுகின்றார். இவர் பொருளியல், கல்வியியல் ஆகிய இரு துறைகளிலும் துறைபோகக் கற்றவர், கற்றுக்கொண்டிருப்பவர். இந்த இரு புலமைசார் அறிவு, ஆய்வு மரபுகளின் செழுமைகளை உள்வாங்கி புத்தாக்க சிந்தனைகளுக்கு தடம் அமைத்துத் வருபவர். 

இவர் இன்று கல்வியியலில் கல்விப் பொருளியல் என்னும் துறைசார் விருத்தியில் முழுமையான ஈடுபாடு கொண்டிருப்பவர். இவரது தொடருறு சிந்தனையும் தேடலும் மற்றும் ஆய்வுகளும் கல்வியியலில் புதுப் பரிமாணங்களாகின்றன. இதுவே இவரை ஏனைய கல்வியியல் ஆய்வாளர்களிலிருந்து வேறுபடுத்தும் பண்பாகவும் அமைகின்றது. இவரது நூல்கள் இதனையே வெளிப்படுத்துகின்றன.