புத்தகம் : காலநிலை மாற்றம்
ஆசிரியர் : நாகமுத்து பிரதீபராஜா
பதிப்பகம் : சேமமடு பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : புவியியல்
ISBN: 978-955-685-173-1
விலை : 1800 பக்கங்கள் : 254
புத்தகம் : நறுந்தொகை
ஆசிரியர் : ந.மு.வேங்கடசாமி நாட்டார்
பதிப்பகம் : பத்மம் பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : குழந்தை இலக்கியம்
ISBN: 978-955-0367-50-4
விலை : 180.00 பக்கங்கள் :
வெளியீடு எண் : இதழ்-71-73
ஆசிரியர் : தெ.மதுசூதனன்
ISSN : 20219041
விலை : 100.00 ரூபா
வெளியீடு : 2017 May - July
பதிப்பாசிரியர் : சதபூ.பத்மசீலன்

கிராமத்துக் கதைகள்

நாம் கதைகளால் நிரம்பிய உலகத்தில்தான் வாழ்கின்றோம். நமக்குக் கதையென்பது காலத்தின் தொல்வடிவங்களுள் ஒன்றாகும். நமக்குக் கதையைச் சொல்வதும் கேட்பதும் வெறும் பொழுதுபோக்கு அல்ல. அது ஒரு வாழ்வியல் சார்ந்த உயிர்ப்பான தருணங்களாகும். நமது ஆத்ம ஈடேற்றத்தின் சடங்காக வாழ்முறைக்கான வளமான கூறுகளாக அடையாளம் காட்டும் களஞ்சியம்.  மானிட வாழ்வில் இந்தக் கதைகள் பண்டமாற்றம் போல் பரிமாறிக் கொள்ளப்பட்டன. இந்தப் பரிமாற்றம் பன்முக ரீதியில் இன்றுவரை தொடர்கிறது. 

கதை சொல்லலும் கேட்டலும் தொடர்ந்து கதை புனையும் பண்பையும் வளர்த்தெடுத்தது, கதையெழுதும் மரபையும் கண்டுபிடித்தது. ஆக கதைகள் நமது மகிழ்வுக்குரிய சாதனம். பொதுவில் கதைகள் எங்கும் நீக்கமற ஓடிக்கொண்டிருக்கிறது. இதனால் மானிட வளர்ச்சியின் உயிர்ப்புத் தளமாகவும் கதைக்களம் இடம்பெறுகின்றது. 
 
பன்னாட்டுப் பண்பாட்டு அடையாளமாகவும் கதைகள் நீட்சி பெறுகின்றது. கதையின் வழியே நமக்கான வாழ்வியல் மதிப்பீடுகள் கருத்தேற்றம் செய்யப்படுகின்றது. தனிமனிதனின் ஆசைகள் விருப்புகள், இரகசியங்கள், மகிழ்ச்சியின்மைகள், இயலாமைகள், தோல்விகள், வீரம், துணிச்சல், நகைச்சுவைகள் போன்றவைகள் கதைகள் வழியே பரிமாறப்படுகின்றன. இதைவிட சமூகத்தின் மீதான தனிமனிதனின் கோபம், இயலாமை மற்றும் அதிகாரத்தை மறைமுகமாக பரிகசிப்பது போன்றவையும் கதைவழியேதான் நமக்குச் சாத்தியமாகின்றன. இதனால்தான் சிறார்கள

ஏ.றமீஸ்
A.Rameez

சாதாரண குடும்பத்தில் பிறந்த கலாநிதி றமீஸ் அபூபக்கர் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் சமூகவியல் விசேடதுறையில் 2004ல் முதல் நிலையில் சித்தியடைந்த்தன் விளைவாக அதே பல்கலைக்கழகத்தில் நிரந்தர விரிவுரையாளாக நியமிக்கப்பட்டார். பின்னர் தனது முதுமானி பட்டத்தினை பேராதனை பல்கலைக்கழகத்தில் பெற்ற இவர், சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தில் ஆய்வுப்புலமைப்பரிசிலைப் பெற்று தனது கலாநிதிப்பட்டத்தை பூர்த்தி செய்தார். அது மட்டுமன்றி முரண்பாட்டும் தீர்வையும் சமாதான ஆயத்தங்களும் கற்றைநெறியை பிரித்தானியாவில் பிரட்பேட் பல்கலைக்கழகத்திலும் பூர்த்தி செய்திருக்கின்றார். சமூக விவகாரங்களிலும் ஆய்வுப்பணியிலும் அதிகம் அக்கறை காட்டும் இவர் சிறந்த அரசியல் ஆய்வாளரும் ஆவார்.