Book Type (புத்தக வகை) : தத்துவம்
Title (தலைப்பு) : வேதாந்த மெய்யியல்
Chemamadu Number (சேமமடு இலக்கம்) : CBCN:2012-12-01-115
ISBN : 978-955-685-014-7
EPABNo : EPAB/02/18856
Author Name (எழுதியவர் பெயர்) : பேராசிரியர் நா. ஞானகுமாரன்
Publication (பதிப்பகம்): சேமமடு பதிப்பகம்
Publisher (பதிப்பாளர்): சதபூ.பத்மசீலன்
Release Date (பதிப்பிக்கப்பட்ட ஆண்டு): 2012
Dimension (நூலின் உயரம், அகலம், எடை) : 21 cm 14 cm
No. of Pages (பக்கங்களின் எண்ணிக்கை): 244
Price (LKR) (விலை (இலங்கை ரூபாய்)): 460.00
Edition (பதிப்பு): முதற் பதிப்பு
Binding (கட்டு): சாதாரணம்
Language (மொழி): தமிழ்
Translation (மொழிபெயர்ப்பு): இல்லை, இது ஒரு நேரடி நூல்
Sales Details (விற்பனை விபரம்): விற்பனையில் உள்ளது
Content (உள்ளடக்கம்):

பொருளடக்கம்

அணிந்துரை
முகவுரை
பதிப்பாசிரியர் உரை
  • 1. இந்திய மெய்யியலுக்கு ஓர் அறிமுகம்
  • 2. வேதாந்தத்திற்கு ஓர் அறிமுகம்
  • 3. சங்கரர் காட்டும் பிரம்மம்
  • 4. சங்கரர் காட்டும் ஆத்மன்
  • 5. சங்கரர் காட்டும் உலகு
  • 6. சங்கரர் காட்டும் மாயை
  • 7. சங்கர வேதாந்த விமர்சனமும் மறுப்பும்
  • 8. சங்கரரும் அத்வைதமும்
  • 9. அறிவாராய்ச்சியியல்
  • 10. ஒழுக்கவியல்
  • 11. மோட்சம்
பின்னிணைப்பு
நூற்பட்டியல் l
நூற்பட்டியல் ll
Full Description (முழுவிபரம்):

இந்திய சிந்தனைப் பரப்பில் வேதாந்த மெய்யியலானது ஒரு காத்திரமான இடத்தினைப் பெற்றதொன்றாகும். இந்திய மெய்யிய லானது ஆழமானதும் தாக்கமானதுமான சிந்தனைப் புலத்தைக் கொண்டதென்பதனை வேதாந்த மெய்யியலை அறிந்த பின்னரே மேலைத்தேயச் சிந்தனையாளர்கள் பலர் ஏற்றுக்கொண்டமை அறிதற்குரியதாகும். இத்தன்மை அவர்கள் பலரை மேலும் ஆராய்வதற்குத் தூண்டுவதாகவும் விளங்கிற்று. இதில் குறிப்பாகச் சங்கர மெய்யியல் சிறப்பிடம் பெறுகின்றது. இவ்வகையில் சங்கர வேதாந்த மானது தத்துவச் செழுமையும் தர்க்க நுட்பச் சிறப்பும் கொண்டதாக அமைந்ததாகும்.  
அதேவேளை இம் மெய்யியலானது விளங்குவதற்குக் கடினமான தொன்றாகவும் பலரால் எடுத்தாளப்பட்டமை காணலாம். 'தெளிவாகத் தெரியாமல் போனால் அது வேதாந்தம்' என எடுத்தாளப்படும் சொல்லாட்சியும் தெரியாததைக் குறிப்பிடுகின்ற போதில் 'நீயும் உன் வேதாந்தமும்' எனும் சொல்லாட்சியும் மக்களிடத்தில் பழக்கத்தில் பயன்படுத்தப்படுவதினின்று வேதாந்தம் கொண்டிருந்த கடினத் தன்மையை இலகுவில் புரிந்து கொள்ளலாம்.  இந்திய மெய்யியலை ஒருவர் தெளிவுறப்  புரிந்து கொள்வதென்றால் அல்லது அதன் சிறப்பியல் பினை அறிந்து கொள்வதென்றால் முதற்கண் அவர் வேதாந்த மெய்யியலைத் தெளிவுற அறிந்துகொள்ள வேண்டியது அத்தியாவசிய மானதாகும். இவ்வகையில் இந்திய மெய்யியலைப் புரிந்து கொள்ள முனைபவர்களுக்கும் வேதாந்த மெய்யியலை அறிந்து கொள்ள முனையும் ஆர்வலர்கள் அனைவர்க்கும் இந்நூல் பயன்படவல்லதாகும்.
வேதாந்த மெய்யியலானது அதன் திட்ப நுட்பத்தின் காரணமாக சமகாலச் சிந்தனையிலும் அது பெரிதும் செல்வாக்குச் செலுத்துகின்ற சிந்தனைப் புலமாக அமைந்துள்ளமையைக் காணலாம். பிரம்ம சூத்திரத்திற்கு உரை வகுத்த தன்மையில் பலர் வேறுபட்ட விளங்கங் களின் வழி பல்வேறான வேதாந்தத் தரிசனங்களுக்கு வழிவகுத்தனர். இவ்வகையில் சங்கரர், இராமானுஜர், மத்துவர், வல்லபர், ஸ்ரீகண்டர், பாஸ்கரர், ஸ்ரீபதி, விஞ்ஞானபிக்ஷு, கேசவர், நீலகண்டர்,  பாலதேவர் போன்ற பலரின் உரைகளை உதாரணமாகக் குறிப்பிடலாம். எனினும் இந்நூல் ஆதிசங்கரரின் அத்வைதத்தினையே முதன்மைப்படுத்தி ஆராய்வதாக அமைந்துள்ளது. 
இக்கருத்தியலின் தொடர்ச்சியாக அமையவிருக்கும் அடுத்த நூல் இராமானுஜர், மத்துவர் ஆகியோரின் வேதாந்தத்தினைக் குறிப்பாக உள்ளடக்கி ஆராய்வதாக அமைய உள்ளமையால் இவ்விடத்து அவை தவிர்க்கப்பட்டுள்ளமை  காணலாம். சங்கர வேதாந்தம் பற்றிய இந் நூலானது  பதினொன்று அத்தியாயங்களாகப் பகுக்கப்பட்டு விளக்கி நிற்கின்றது. இந்திய மெய்யியலுக்கும் வேதாந்தத்திற்கும் அறிமுகமளிப்ப தாக முதலிரு அத்தியாயங்கள் முறையே அமைகின்றன. அடுத்த மூன்று அத்தியாயங்கள் சங்கரர் எடுத்தாளும் பிரம்மம், ஆத்மன், உலகு ஆகியன வற்றை ஆராய்கின்றன. அதனை அடுத்து வரும் இரு அத்தியாயங்களும் மாயை பற்றியும் மாயைக்கு எதிராக முன்வைத்த  கருத்துக்களையும் அதன் ஏற்புடைமை பற்றியும் சுட்டியமைகின்றன. எட்டாம் அத்தியாயம் சங்கர அத்வைதம் பற்றியும் ஒன்பதாம் அத்தியாயம் அறிவுப் பிரமாணங்கள் பற்றியும் பத்தாம் அத்தியாயம் ஒழுக்கவியல் பற்றியும் இறுதி அத்தியாயமான பதினொன்று வேதாந்த முத்தி பற்றிச் சிந்திப்பதாக அமைகின்றது.
இந்நூல் வெளிவருவதற்குப் பலர் பல வகைகளில் தோன்றாத் துணையாக நின்றுள்ளனர். ஆத்மிகத்தில் ஈடுபட்ட அன்பர்களின் வேண்டுதலும் இந்நூல் உருப்பெறுவதற்கு ஒரு காரணமாகும். அவாகளின் தூண்டுதலுக்கு எனது மனமார்ந்த நன்றிகள். இந்நூலுக்கு இன்முகத்துடன் அணிந்துரை வழங்கிய சுவாமி ஆத்மகனானந்தா அவர் களுக்கு மனமார்ந்த அன்பினைத் தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகின் றேன். இவ்வுரையானது பல வருடங்களுக்கு முன்னர் அளிக்கப்பட்ட போதிலும் தவிர்க்கமுடியாத காரணத்தினால் காலம் தாழ்த்தியே வெளிவருகின்றது. 
மேலும் இந் நூலுக்கு அட்டைப்படத்துக்கான படத்தினை சிரமங் களின் மத்தியிலும் அன்புடன் வழங்கிய கொழும்பு இராமகிருஷ;ண மடத்து இளைய சுவாமிகளுக்கும் பணிவான நன்றிகள். இந்நூலைச் செம்மையாக பதிப்பித்த சேமமடு உரிமையாளர் திரு சதபூ.பத்மசீலனுக்கும்  மற்றும் அவர்தம் ஊழியர்கட்கும் எமது மனமார்ந்த நன்றிகள்.

பேராசிரியர்.நா.ஞானகுமாரன்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்