புத்தகம் : காலநிலை மாற்றம்
ஆசிரியர் : நாகமுத்து பிரதீபராஜா
பதிப்பகம் : சேமமடு பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : புவியியல்
ISBN: 978-955-685-173-1
விலை : 1800 பக்கங்கள் : 254
புத்தகம் : நறுந்தொகை
ஆசிரியர் : ந.மு.வேங்கடசாமி நாட்டார்
பதிப்பகம் : பத்மம் பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : குழந்தை இலக்கியம்
ISBN: 978-955-0367-50-4
விலை : 180.00 பக்கங்கள் :
வெளியீடு எண் : இதழ்-71-73
ஆசிரியர் : தெ.மதுசூதனன்
ISSN : 20219041
விலை : 100.00 ரூபா
வெளியீடு : 2017 May - July
பதிப்பாசிரியர் : சதபூ.பத்மசீலன்

அ ஆ இ... உயிர்மொழி

"மெல்லத் தமிழ் இனிச்சாகும்" என்று பாரதியார் பாடினார் என்று அறிகிறோம்.  "இனிச்சாகும்" என்று பாடினாரா, "இனிச்சு ஆகும்" என்று பாடினாரா என்று தெரியவில்லை என்று தமிழ் நாட்டில் சிலர் குழப்பி விளக்குகிறார்கள்.  பாரதியாரின் கருத்து எப்படி அன்று இருந்ததோ தெரியவில்லை.  ஆனால் தமிழ் நாட்டில் இன்று தமிழ்மொழி படுகின்ற பாட்டைப் பார்க்கின்றபோது "விரைவில் தமிழ் இனிமேல் சாகும்" என்று நிச்சயமாக நினைக்கத் தோன்றுகின்றது.

 
   தமிழ்நாட்டில் அவதிப்படுகின்ற தமிழின் நிலையை நினைந்து, புலம் பெயர்ந்து வாழ்கின்ற தமிழர், தமிழ்மொழியை வெளிநாட்டிலாகுதல் அழியாமற் காக்க முடியுமா என்று நீளநினைந்து செயற்பட்டு வருகின்றார்கள்.  தமிழர் பெயர்ந்து வாழ்கின்ற ஐரோப்பிய, கனேடிய, அமெரிக்க, தென்கிழக்காசிய நாடுகளில் தமிழை வாழ வைப்பதற்கான சூழல் இல்லை.  அவ்வாறு இருந்தும், ஈழத்தமிழர் தமிழ்க் கல்விக் கூடங்கள் நிறுவியும், தமிழ்நூல்கள்  எழுதியும், தமிழ் பற்றிய ஆங்கில நூல்கள் எழுதியும், கலை கலாசார நிறுவனங்கள் நிறுவியும், தமிழ்மொழியின் வாழ்வை நிலைநாட்ட முயன்றுகொண்டிருக்கிறார்கள்.   தென்னாபிரிக்கா, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் தமிழ் வளர்ச்சிக்கென, தமிழ் வாழ்வுக்கென தமிழர்கள் கடந்த ஒரு நூற்றாண்டுக் காலமாக எடுத்த முயற்சிகள் என்ன ஆயின என்ற கேள்விகள் கேட்கப்படுகின்ற நிலையிலும், ஈழத்தமிழர் சோர்வடைந்து விடாமல் தமிழ் வளர்ச்சித் திட்டங்களில் விடா முய

சோ.கிருஷ்ணராஜா
Krishnarajah, S Prof

பேராசிரியர் முனைவர் சோ.கிருஷ்ணராஜா யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மெய்யியற்துறையில் முதுநிலை ஆசிரியராக, ஆய்வாளராகப் பணியாற்றி கலைப்பீடாதிபதியாக உயர்வு பெற்றவர். 

மெய்யியற்கலை, இலக்கியம், உளவியல் மற்றும் புதிய சிந்தனை வரலாறு போன்றவற்றில் ஆழமான அகலமான கற்றலும் தேடலும் உள்ளவர். அவை சார்ந்த கருத்தாடல்களிலும் ஆய்வுகளிலும் முழுமையாக ஈடுபட்டுவருபவர். இதுவரையில் இவர் எழுதிய நூல்கள் இத்துறைகள்சார் அறிவுருவாக்கப் பணியில் தனியிடம் பெறுபவை. 

இவரது சைவசித்தாந்தம் குறித்த வாசிப்பும் ஆய்வும் தமிழில் நுணுக்கமான வித்தியாசமான மற்றுப் பார்வைகளை முன்வப்பவை. புதிய பொருள்கோடல் மரபை உருவாக்குபவை. இவர் தொடர்ந்து சமூகவரலாற்றுப் பின்னணியில் அழகியல், தத்துவ உரை