புத்தகம் : காலநிலை மாற்றம்
ஆசிரியர் : நாகமுத்து பிரதீபராஜா
பதிப்பகம் : சேமமடு பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : புவியியல்
ISBN: 978-955-685-173-1
விலை : 1800 பக்கங்கள் : 254
புத்தகம் : நறுந்தொகை
ஆசிரியர் : ந.மு.வேங்கடசாமி நாட்டார்
பதிப்பகம் : பத்மம் பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : குழந்தை இலக்கியம்
ISBN: 978-955-0367-50-4
விலை : 180.00 பக்கங்கள் :
வெளியீடு எண் : இதழ்-71-73
ஆசிரியர் : தெ.மதுசூதனன்
ISSN : 20219041
விலை : 100.00 ரூபா
வெளியீடு : 2017 May - July
பதிப்பாசிரியர் : சதபூ.பத்மசீலன்

உயிரினப் புவியியல்

உயிரினப் புவியியல் என்பது, உலகில் காணப்படும் பல்வேறு இனங்களின் கடந்தகால மற்றும் நிகழ்காலப் பரம்பல் பற்றிய ஆய்வாகவும் புவியியலின் ஒரு கிளையாகவும் விளங்குகின்றது. பௌதிகச் சூழலானது இனங்களையும் அவற்றின் இடஞ்சார்ந்த பரம்பலையும் பாதிப்பதாகக் காணப்படுவதனால் அதனைப் பௌதிகப் புவியியலின் ஒரு பகுதியாகக் கருதுகின்றனர். இதனால் உலகின் உயிரினக் கூட்டம் மற்றும் பாகுபாடு ஆகியவற்றின் ஆய்வாகவும் கருதப்படுகின்றது. அத்துடன் உயிரியல், உயிர்ச் சூழல், பரிணாமம் பற்றிய ஆய்வுகளுடன் நெருங்கிய இணைவினையும் கொண்டிருக் கின்றது. இன்று, உயிரினப் புவியியல் வரலாற்று உயிரினப் புவியியல், உயிர்ச் சூழல் உயிரினப் புவியியல் மற்றும் பேணிப் பாதுகாத்தல் உயிரினப் புவியியல் என மூன்று பிரதான பிரிவுகளாகக் கருதப்படு கின்றது. வரலாற்று ரீதியான உயிரினப் புவியியலானது கடந்த கால இனங்களின் பரம்பலில் காலநிலை மாற்றத்தின் செல்வாக்கு மற்றும்  குறிப்பிட்ட சில பகுதிகளில் ஏன் குறிப்பிட்ட சில இனங்கள் விருத்தியுற்றிருக்கின்றன, கண்டத் தகடுகளின் அசைவால் இனங்களின் நகர்வுகள் எவ்வாறு இடம் பெற்றன, அதற்கான சுவட்டுச் சான்றுகள் எவை என்பன பற்றி ஆய்வு செய்கின்றது.
 
''உயிர்ச் சூழல் உயிரினப் புவியியலானது காலநிலை, முதனிலை உற்பத்தி மற்றும் வாழிடங்கள் தொடர்பான விடயங்களை ஆய்வு செய்கின்றது. பேணிப் பாதுகாத்தல் தொடர்பான உயிரினப் புவியியல் இயற்கையினையும் அதன் தாவரங்கள் மற்றும் விலங்குக

க.சின்னத்தம்பி
K.Sinnathampi

கணபதிப்பிள்ளை சின்னத்தம்பி யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கல்வியியல் துறையில் விரிவுரையாளராக பேராசிரியராக துறைத் தலைவராகப் பலநிலைகளில் பணியாற்றியவர். நீண்டகால கற்பித்தல் அனுபவமும் ஆராய்ச்சி மரபும் கொண்டவர். ஆசிரியர் கல்வியில்       புத்தாக்கமும் பல்பரிமாணமும் சிறக்க உழைத்து வருபவர்.
 
இவர் விஞ்ஞான கணித அறிவுத் தொகுதியின்  விரிவாக்கப் புலங்களை உடனுக்குடன்        உள்வாங்கி கல்வியியலில் புதுமலர்ச்சி ஏற்பட முயற்சிப்பவர். இவரது நூலாக்கப் பணிகள்   கல்வியியல் துறையில் புதுஆய்வு மரபு, ஆக்கமலர்ச்சிப் பண்புகள் புத்தாக்கச்           சிந்தனைகள் ஏற்படக் காரணமாக விளங்குகின்றன. இதற்கு இவரது ஆக்கங்கள் மேலும் வலுச்சேர்க்கின்றன.

சமகால கல்வி வளர்ச்சியில் தரவிருத்தியை உறுதிப்படுத்தும் ஆய்வுக் களங்களை         முன்னிறுத்தி இயங்கி வருபவர்.