Book Type (புத்தக வகை) : குழந்தை இலக்கியம்
Title (தலைப்பு) : உறவுகள்
Chemamadu Number (சேமமடு இலக்கம்) : PPMN:2010-08-04-015
ISBN : 978-955-0367-14-6
EPABNo : EPAB/2/19245
Author Name (எழுதியவர் பெயர்) : செ.து.தெட்சணாமூர்த்தி
Publication (பதிப்பகம்): பத்மம் பதிப்பகம்
Publisher (பதிப்பாளர்): சதபூ.பத்மசீலன்
Dimension (நூலின் உயரம், அகலம், எடை) : 21 cm 14 cm
Price (LKR) (விலை (இலங்கை ரூபாய்)): 300.00
Edition (பதிப்பு): இரண்டாம் பதிப்பு
Binding (கட்டு): சாதாரணம்
Language (மொழி): தமிழ்
Translation (மொழிபெயர்ப்பு): இல்லை, இது ஒரு நேரடி நூல்
Sales Details (விற்பனை விபரம்): விற்பனையில் உள்ளது
ஏனைய பதிப்புக்களின் விபரம்
தலைப்பு (Book Name) : உறவுகள்
Release Date (பதிப்பிக்கப்பட்ட ஆண்டு): 2010
No. of Pages (பக்கங்களின் எண்ணிக்கை): 24
Price (LKR) (விலை (இலங்கை ரூபாய்)): 200.00
Edition (பதிப்பு): முதற் பதிப்பு
Content (உள்ளடக்கம்):

    அக்காளுக்கு மாலை சூடி
        அத்தானாக வீடு வந்தவர்
    எக்காலமும் எங்களுக்கு
        ஏற்ற துணையாய் இருப்பவர்.

    அத்தானாக வீடு வந்தவர்
        அப்பாவாக அருள் சொரிந்தவர்
    பெத்த பிள்ளை போலவே
        பேணி நம்மைக் காத்தவர்

    புத்தம்புது ஆடை வாங்கி 
        பூத்த முகத்துடன் தந்தவர்
    நித்தநித்தம் நினைவில் வைத்து
        நிதமும் நம்மைக் காத்தவர்

    குறைந்த மாதச் சம்பளத்தில்
        குதூகலமாய் வாழ்ந்தவர்
    நிறைந்த மனதுடன் எந்நாளும்
        நிறைகுடமாய் வாழ்ந்து சிறந்தவர்

    என்றும் எங்கள் நினைவிலே
        இருந்த அவரை எல்லோரும்
    நன்று அவர் வாழவென்று
        நாளும் கடவுளை வேண்டுவோம்.

Full Description (முழுவிபரம்):

    உதிரத்தில் உருவான உறவு
        உயிருள்ள வரையும் தொடரும்
    சதிரத்தில் ஏற்படும் துடிப்பு
        சகவாச தோஷத்தால் பிடிப்பு.

    அண்ணன் தம்பி உறவு
        அக்கா தங்கை உறவு
    மண்ணில் வாழும் வரையும்
        மனதில் நின்று குலவும்

    தந்தை வழி சொந்தம்
        தாய்வழி சொந்தம்
    இந்த உலகில் நமக்கு
        இருந்து வரும் சொந்தம்

    இன்ப துன்பம் இரண்டிலும்
        இரண்டறக் கலந்திடும் சொந்தம்
    அன்பு வழியில் நாமும்
        அரவணைத்து நடப்போம் வாழ்வில்

    தன்னை அடையாளம் காட்டுவது
        தனது சொந்தம் என்பதை
    பிள்ளை நீயும் அறிவாய்
        பெரிதும் பேணி நடப்பாய்