புத்தகம் : காலநிலை மாற்றம்
ஆசிரியர் : நாகமுத்து பிரதீபராஜா
பதிப்பகம் : சேமமடு பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : புவியியல்
ISBN: 978-955-685-173-1
விலை : 1800 பக்கங்கள் : 254
புத்தகம் : நறுந்தொகை
ஆசிரியர் : ந.மு.வேங்கடசாமி நாட்டார்
பதிப்பகம் : பத்மம் பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : குழந்தை இலக்கியம்
ISBN: 978-955-0367-50-4
விலை : 180.00 பக்கங்கள் :
வெளியீடு எண் : இதழ்-71-73
ஆசிரியர் : தெ.மதுசூதனன்
ISSN : 20219041
விலை : 100.00 ரூபா
வெளியீடு : 2017 May - July
பதிப்பாசிரியர் : சதபூ.பத்மசீலன்

குயிலோசை

    காலையில் கதிரவன்
        கண் விளிக்க
    காலை புலர்ந்தது
        கதிரொளி பரந்தது

    காலையென்று அறியாமல்
        கன்துயில் கொள்ளலாமோ
    காலை விடிந்தது
        கண்விளித்து வாடி

    சேவல் கூவுது
        செந்தாமரை விரியுது
    கோயில்மணி அடிக்குது
        கூடிக்காகம் கரையுது

    பசுவும் பால் சொரியுத
        பசுக்கன்றும் துள்ளிக் குதிக்குது
    பசும்புல் நுனியில் தங்கிய
        பனித் துளியும் மறையுது

    பூக்கள் எல்லாம் விரியுது
        புதுமணம் எங்கும் பரவுது
    பாக்கள் தீட்டிய
        பாவலர் இருப்பது பாரடியோ.

    பஞ்சனையில் படுத்துறங்கியது போதும்
        பள்ளிச் சிறுவர் படிப்பதைக் கேளடி
    கொஞ்சமும் கூச்சம் இல்லாமல்
        குறட்டை விட்டுத் தூங்கலாமோடி 


க.சண்முகலிங்கம்
Shanmugamlingam, K

கந்தையா சண்முகலிங்கம் ( 1945 ) பன்னாலை சேர் கனகசபை வித்தியாசாலையிலும், தெல்லிப்பழை மகாஜனாக் கல்லூரியிலும் கல்வி கற்றார். 1962 இல் பேரதனைப் பல்கலைக்கழகத்திற்குச் சென்று கல்வி கற்று கலைமாமணிப் பட்டத்தினைப் பெற்றுப் பின்னர் SLIDA நிறுவனத்தில் கற்றுப் பொது நிர்வாகவியல் பட்டத்தையும் பெற்றார். இலங்கை நிர்வாக சேவையில் ( 1971 - 2004 ) பல்வேறு உயர் பதவிகளை வகித்துள்ளார்.