Book Type (புத்தக வகை) : தொகுப்பு
Title (தலைப்பு) : பேராசிரியர் நந்தியும் மலையகமும்
Chemamadu Number (சேமமடு இலக்கம்) : CBCN:2008-08-02-022
ISBN : 978-955-1857-21-9
Author Name (எழுதியவர் பெயர்) : கே.பொன்னுத்துரை ப.ஆப்டீன்
Publication (பதிப்பகம்): சேமமடு பதிப்பகம்
Publisher (பதிப்பாளர்): சதபூ.பத்மசீலன்
Release Date (பதிப்பிக்கப்பட்ட ஆண்டு): 2008
Dimension (நூலின் உயரம், அகலம், எடை) : 21 cm 14 cm
No. of Pages (பக்கங்களின் எண்ணிக்கை): 148
Price (LKR) (விலை (இலங்கை ரூபாய்)): 260.00
Edition (பதிப்பு): முதற் பதிப்பு
Binding (கட்டு): சாதாரணம்
Language (மொழி): தமிழ்
Translation (மொழிபெயர்ப்பு): இல்லை, இது ஒரு நேரடி நூல்
Sales Details (விற்பனை விபரம்): விற்பனையில் உள்ளது
Content (உள்ளடக்கம்):

பொருடக்கம்

1.  முன்னுரை

2.  à®¤à¯Šà®•à¯à®ªà¯à®ªà¯à®°à¯ˆ

3.  à®ªà®¤à®¿à®ªà¯à®ªà¯à®°à¯ˆ

4.  à®•à®Ÿà¯à®Ÿà¯à®°à¯ˆà®•à®³à¯

  • சாரல் நாடன் 
  • தெளிவத்தை ஜோசப்
  • அந்தனி ஜீவா
  • ப.ஆப்டீன்
  • சு.முரளிதரன்
  • கே.பொன்னுத்துரை
  • ச.சந்தனப்பிச்சை
  • டாக்டர்.தி.ஞானசேகரன்
  • இர.சந்திரசேகர சர்மா
  • நா.நடேசன்
  • பர்சானா நயீம் 
  • குறிஞ்சி நாடன் (கவிதை)
  • பத்மா சோமகாந்தன்
  • டாக்டர். ச.முருகானந்தன் 
  • பேராசிரியர் வசந்தி அரசரத்தினம்
5.  à®…நுபந்தம் (i)
  • சாரல்நாடன் (தாமரையில் வெளிவந்தது)
  • செல்வி கே.ராஜேஸ்வரி (மல்லிகையில் வெளிவந்தது)
  • பேரா.கார்த்திகேசு சிவத்தம்பி (இறப்பு என்பது முடிவு      அல்ல         à®¨à¯‚லிலிருந்து)
6.  à®…நுபந்தம் (ii)
  • பின்னுரை -  à®®à¯‡à®®à®©à¯à®•à®µà®¿
7.  à®¨à®¨à¯à®¤à®¿à®¯à®¿à®©à¯ மலையகச் சிறுகதைகள்
  1. ஊர் நம்புமா?
  2. யானையின் காலடியில்
  3. பாத தரிசனம் 
8.  à®…நுபந்தம் (iii)
  • நந்தியின் படங்கள்
Full Description (முழுவிபரம்):

பேராசிரியர் நந்தி வாழ்ந்த காலத்திலேயே அவர் மலையக இலக்கிய வளர்ச்சிக்கு ஆற்றிய சேவையை ஆராய்ந்து ஒரு நூல் வெளியிட வேண்டும் என்ற எண்ணம் எங்களிடம் முகிழ்ந்திருந்தது. 
ஒருநாள் வெள்ளவத்தை தமிழ்ச்சங்கத்தில் ஓர் இலக்கியக் கூட்டம் முடிந்து திரும்பும் வேளையில் நந்தி அவர்களுடன் கொட்டாஞ்சேனை வரைக்கும் பஸ்ஸில் பிரயாணம் செய்யும் அரியவாய்ப்புக் கிடைத்து மனம் மகிழ்ந்தோம்.  à®¨à®¾à®®à¯ இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு 'நாவல் நகரில் நந்தி சந்திப்புகள்' நூலாக்கம் பற்றிக் குறிப்பிட்டு அபிப்பிராயம் கேட்டோம். 
அவர் சற்று நேரம் மௌனித்துவிட்டுச் 'சரி' உங்கள் விருப்பம்... சந்திப்புகள் நல்ல தலைப்பு என்று கூறினார். நாம் மிகுந்த ஆர்வத்தோடு அவரது வார்த்தைகளை உள்ளூர ஒரு அங்கீகாரமாகவே ஏற்று நூல் வெளியிடத் திட்டமிடத் தொடங்கினோம்! 
நந்தி மறைந்த பிறகு எமது எண்ணம் வலுவடைந்தது. மலையகத்தில் நந்தியுடன் மிக நெருக்கமாகப் பழகிய நண்பர்களுக்குக் கடிதம் எழுதினோம்.  à®¨à®£à¯à®ªà®°à¯ சாரல்நாடன் பாராட்டுக் கடிதத்துடன் கட்டுரை அனுப்பி எம்மை உற்சாகப்படுத்தினார்.  à®…தைத் தொடர்ந்து கட்டுரைகள் அஞ்சலிலும் நேரடியாகவும் வந்து சேரத்தொடங்கின. 
மலையகம் ஒரு பின்தங்கிய பிரதேசம் இது பல தசாப்தங்களாகச் சொல்லப்பட்டு வரும் ஒரு கருத்து.  à®†à®©à®¾à®²à¯, இதனை மிகத் துல்லியமாக ஆராய்ந்து பார்த்தால், மலையகம் காலம் காலமாக, பல்வேறு துறைகளின் ஊடாக குறிப்பிடத்தக்க வளர்ச்சியடைந்து வந்துள்ளதை மிகத்தெளிவாக அவதானிக்க முடியும்.
குறிப்பாகக் கல்வி, கலை, இலக்கிய, மருத்துவ மற்றும் பொதுத் துறைகளில் மலையகப் பிரதேசத்தில் தோன்றியவர்களால் ஏற்பட்ட மாற்றங்களுக்கு, வெளிப் பிரதேசங்களிலிருந்து மலையகத்தில் சேவையாற்ற வந்தவர்கள் ஆற்றிய பங்களிப்பு மகத்தானதாகக் கருதப்படுகிறது. அவ்வாறு அளப்பரிய பங்களிப்புச் செய்தவர்களில் பெரும்பாலானோர் கலை இலக்கியத் துறைகளில் மிகுந்த ஈடுபாடுடையவர்களாக இருந்தமை மலையக மக்களுக்கு ஒரு மிகச் சிறந்த வாய்ப்பாக அமைந்ததை நாம் மிகத் தெளிவாக அவதானித்து வந்துள்ளோம். 
இதற்கு உதாரணமாக வெளிப் பிரதேசங்களைச் சார்ந்த ஆசிரியர்கள் பரிச்சயமான கலை இலக்கிய வாதிகளாக இருந்தமையைக் குறிப்பிடலாம். இதற்கு அடுத்தபடியான ஒரு எடுத்துக்காட்டாக வைத்தியத் துறையைச் சுட்டிக் காட்டலாம். இந்த மருத்துவத் துறையைச் சார்ந்தவர்களில் மறைந்த டாக்டர் நந்தி, டாக்டர் சதாசிவம், டாக்டர் ஞானசேகரன் போன்றோரைக் குறிப்பிடலாம்.  à®‡à®¨à¯à®¤ வரிசையில் முதன்மையாகக் குறிப்பிட வேண்டிய தகுதி டாக்டர் நந்தி அவர்களையே சாரும்.  à®Ÿà®¾à®•à¯à®Ÿà®°à¯ நந்தி மலையகப் பிரதேசங்களில் கடமையாற்ற வந்த கால கட்டம் மிக முக்கியமானது. 
1958க்கு முன்பும் நாவல் நகரில் நவீன இலக்கிய முயற்சிகள் நடைபெற்ற வண்ணமிருந்தன. ஆனால், அவை பெரும்பாலும் ஆழமான கருத்துக்களைத் தொனிக்கும் கட்டுரைகளாகவும், மரபுக் கவிதைகளாகவும்தான் வளர்ச்சி பெற்றிருந்தன எனலாம். ஆன்மீகத்துறை சம்பந்தமான கட்டுரைகளும் நாளிதழ்களில் பிரசுரமாகிக் கொண்டிருந்த காலகட்டம் அது!
இத்தகைய ஒரு சூழ்நிலையில் நாவல் நகரில் முற்போக்குச் சிந்தனை சார்ந்த ஆக்கவிலக்கியம் 1959ல் டாக்டர் நந்தியின் வருகைக்குப் பின்னரே வளர்ச்சியடையத் தொடங்கியது. 
கிராமந்தோறும் மக்கள் இலக்கிய விழிப்புணர்ச்சியைத் தோற்றுவிக்க வேண்டுமென்ற இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் இலக்கியக் கொள்கையை டாக்டர் நந்தி செவ்வனே நிறைவேற்றினார். 
இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் பிரேம்ஜி ஞானசுந்தரம், டொமினிக் ஜீவா, திரு.திருமதி. சோமகாந்தன், சொக்கன் முதலியோருடன் தொடர்பு கொண்டு நாவல் நகரில் இ.மு.எ.ச.வின் கிளையை அங்குரார்ப்பணம் செய்து வைத்தார். இது நாவலப்பிட்டியின் இலக்கிய வரலாற்றில் ஒரு புதிய திருப்பு முனையாகும்.
ஈழத்துத் தமிழ் இலக்கிய வரலாற்றில் அக்கால கட்டத்தில்தான் மண்வாசனை, பிரதேச இலக்கியம் போன்ற சிந்தனைகளைப் பரவலாக்க வேண்டிய ஒரு தேவை முகிழ்ந்திருந்தது. இந்தத் தேவையை மலையக மண்ணில் வேரூன்றச் செய்வதற்கு ஒரு தனி மனிதனாக நின்று, ஒரு இயக்கத்தின் பண்புகளோடு நந்தி அவர்கள் செயற்பட்டார். 
இதன் காரணமாகத்தான் 'பேராசிரியர் நந்தியும் மலையகமும்' என்று சிந்திக்க வேண்டிய ஒரு சூழல் உருவாகியது.  à®…வ்வாறு நாங்கள் சிந்தித்தபோது, நந்தியின் பணியானது காலத்தால் சுருங்கினாலும் கூட, மேற்குறித்த சிந்தனையின் பின்னணியில் நாவல்நகர் இலக்கிய வரலாற்றில் 'நந்தி காலம்' என்று ஒரு சிறிய காலப்பகுதி அடையாளமாகக் கருதப்படுகிறது.  à®Žà®©à®µà¯‡à®¤à®¾à®©à¯, நந்தி அவர்கள் மலையகத்திற்கு ஆற்றிய அரும் பணியை ஆவணப்படுத்தப்பட வேண்டிய தேவை இருக்கின்றது.  à®¤à®¾à®©à¯à®®à¯ எழுதி மலையக இலக்கிய ஆர்வலர்களையும் எழுதத் தூண்டிய 'நந்தி காலத்தை' மலையகம் நன்கு அறியும். 
இலக்கியத்துறை, மருத்துவத்துறை என்று பிரிக்காமல், பல கோணங்களிலிருந்து அவதானித்து,  'நந்தி மானுடத்தின் குரலைப் பதிவு செய்தவர்; அதன் ஆத்ம துடிப்புக்களைப் பதிகை செய்தவர்.... அற்புதமான மனிதர்...' என்று பேராசிரியர் கா.சிவத்தம்பி, நந்தியின் ஆளுமைப் பண்புகளை அடையாளப்படுத்திக் காட்டியிருப்பதை நாம் ஒரு கணம் ஞாபகப்படுத்திப் பார்க்கிறோம். 
மலையகத்தில் நந்தி அவர்கள் ஆற்றிய சேவையை வெறுமனே தகவல் மட்டத்தில் அறிந்தவர்களிடமிருந்து மட்டுமன்றி, முதன்மையாக நந்தி அவர்களுடன் நெருங்கிப் பழகி உறவாடிய மலையக அன்பர்களிடமிருந்தும் ஆக்கங்களைப் பெற்று 'பேராசிரியர் நந்தியும் மலையகமும்' என்னும் இத்தொகுப்பில் சேர்க்க வேண்டுமென்று முடிவெடுத்தோம். அறுபதுகளில் முகிழ்ந்த மலையக இலக்கிய மறுமலர்ச்சி இன்று தனித்துவம் பெற்றுத் திகழ்வதற்கு நந்தி அவர்களின் ஆரம்பகால ஊக்குவிப்புகள் அடிப்படையாக இருந்தன என்பதில் ஐயமில்லை. இத்தொகுப்பில் அடங்கியுள்ள ஆக்கங்கள் நந்தி அவர்கள் ஒரு தனிமனிதனாகவும், ஒரு இயக்கமாகவும் இயங்கிய பாங்கினைத் துல்லியமாகச் சித்திரித்துக் காட்டுகின்றன. 
இந்த ஆவணம் வெறுமனே நந்தி என்ற தனிமனிதனைப் பற்றி அல்லாமல், மலையகக் கலை இலக்கிய வளர்ச்சியைப் பற்றிய ஒரு ஆவணத் தொகுப்பாகவும் திகழும் என்று நாங்கள் நம்புகின்றோம். இத்தகைய ஒரு ஆவணத் தொகுப்பை உருவாக்க உதவிய இலக்கிய நெஞ்சங்கள் எமக்குப் பக்க பலமாக இருந்தன.
எமது இந்த நூல் வெளியீட்டுத் திட்டத்தைச் செவிமடுத்த 'சேமமடு பொத்தகசாலை' அதிபர் திரு.சதபூ பத்மசீலன் அவர்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் இந்நூலை அச்சிட்டுத்தர விருப்பம் தெரிவித்தமை எமக்குப் பெரிதும் உற்சாகமளித்தது. அழகிய அட்டைப்படத்துடன் இத்தொகுப்பைக் கவர்ச்சியாக அச்சுப்பதிவு செய்துள்ளனர். சேமமடு பொத்தகசாலையின் பணியாளர்கள்  à®‰à®°à¯à®µà®¾à®•à¯à®•à®®à¯ பெற உதவியதுடன் ஓர் ஆழ்ந்த சித்திரிப்பை வழங்கியுள்ளார் மேமன் கவி.
1960ல் நந்தியின் பணிப்புரையை ஏற்று இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் கிளையை அங்குரார்ப்பணம் செய்ய முதன் முதலில் நாவலப்பிட்டிக்கு விஜயம் செய்த இலக்கியப் பெருந்தகை  à®®à®²à¯à®²à®¿à®•à¯ˆ ஆசிரியர் 'டொமினிக் ஜீவா' அவர்கள் சிறப்பான முன்னுரை எழுதி எம்மை உற்சாகப்படுத்தியுள்ளார். 
பெருமனதுடன் நந்தி அவர்களின் புகைப்படங்களையும் விபரங்களையும் தந்தவர் நந்தியின் இளைய மகள் திருமதி ஜனனி தேவானந் அவர்கள். எமது வேண்டுகோளுக்கு அமைய இந்நூலுக்கான கட்டுரைகளை உரிய நேரத்தில் தந்துவிய கட்டுரையாளர்கள், மூலப்பிரதிகளுடன் ஒப்புநோக்கித் திருத்தங்கள் செய்தவர் எழுத்தாளர், நண்பர் மா.பாலசிங்கம் அவர்கள்.
இவர்கள் ஒவ்வொருவரையும் இதயத்தானத்தில் நிறுத்தி ஆழ்ந்த நன்றியைத் தெரிவிக்கிறது 'பசுமைவெளி இலக்கிய வட்டம்' நன்றி... நன்றி... நன்றி. 

ப.ஆப்டீன்
கே.பொன்னுத்துரை